சீனப் பெருஞ் சுவர்.

>> Thursday, October 9, 2008


இச் சுவர் குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. அவ்வப்போது விரிவாக்கப்பட்டு வந்த இச்சுவர் மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.
சுவரின் கட்டுமானப் பணிகளின்போது பலர் இறந்த காரணத்தால் இச்சுவர் உலகின் அதி நீளமான மயானம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.இப்போது இச்சுவர் திருத்த வேலைகள் எதுவுமின்றிச் சில கிராமங்களுக்கு விளையாட்டு மைதானமாகவும் வீடுகளும் சாலைகளும் அமைப்பதற்குக் கற்கள் எடுக்குமிடமாகவும் பயன்படுகின்றது.
சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது.ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை.
இச் சுவர் சிலசமயம் நவீன உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது.1938 ல் ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய அதிசயங்களின் இரண்டாவது புத்தகம் சந்திரனிலிருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ் சுவர் மட்டுமே என்று குறிப்பிட்டது.
இது மிகைப்படுத்தப்பட்டது எனினும் தாழ்வான பூமியைச் சுற்றும் சுற்றுப்பாதையிலிருந்து அதாவது சந்திரனிலும் ஆயிரம் மடங்கு குறைவான தூரத்திலிருந்து பார்க்கும்போது சில வாய்ப்பான சமயங்களில் இது வெறும் கண்ணுக்குத் தெரியக்கூடும்.

0 comments:

Back to TOP