மிஸ்டர். டோப்பு டோமேஷ் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்து வந்தார்.

>> Wednesday, October 15, 2008

மிஸ்டர். டோப்பு டோமேஷ் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்து வந்தார்.
அவளும் டோப்பு டோமேஷ் மீது அன்பாகவே இருந்தாள். இருவரும் சேர்ந்து சுற்றாத இடம் இல்லை. போகாத தியேட்டர் இல்லை. சுமார் 5 ஆண்டுகள் இந்தத் தொடர்பு நீடித்தது. ஆனால் டோப்பு டோமேஷ் -ஐ காதலிக்கிறாளா என்பது கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.
டோப்பு டோமேஷ் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவளை நேரடியாகவே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தார். ஆனாலும் முகத்துக்கு முகம் கேட்க தயங்கிய டோப்பு டோமேஷ், தொலைபேசியில் கேட்டுவிடுவது என்று திட்டமிட்டார். அதன்படி அவள் வீட்டுக்கு போன் செய்ய, அவளே எடுத்தாள்..
டோமேஷ் : ஹலோ.. அபித குஜாம்பிகைதானே..?
அபி : ஆமாம்.. அபிதான் பேசறேன்.. என்ன உன் குரல் நடுங்கறாப்பல தெரியுது..?
டோமேஷ் : ஹி..ஹி.. நான் உன்னை காதலிக்கிறேன்..
அபி : தெரியும்..
டோமேஷ் : நீ என்னைக் காதலிக்கிறாயா..?
அபி : அதில் என்ன சந்தேகம்..?
டோமேஷ் : கடவுளுக்கு நன்றி..! அப்போ நாம திருமணம் செய்துக்கலாமா..?
அபி : நிச்சயமா..!
டோமேஷ் : எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லேன் ப்ளீஸ்..
அபி : முதல்ல உன் பேர் என்னன்னு சொல்லு.. நானும் அப்போலேருந்து கெஸ் பண்ணறேன்.. எவன்னே புரியல..!

Read more...

ஆமை குஞ்சு பறக்க ஆசைப்பட்டதாம்

>> Thursday, October 9, 2008

ஒரு ஆமை மரத்தில் மிகச் சிரமப்பட்டு ஏறியது.. அங்கிருந்து மறுபடி கீழ்நோக்கி பாய்ந்தது. பாயும் போது தன் கால்களை காற்றில் ஆட்டிக்கொண்டே பாய்ந்து வந்தது. கீழே மண்ணில் விழுந்து அடிபட்டுக்கொண்டாலும் மீண்டும் மீண்டும் அந்த முயற்சியை செய்துகொண்டே இருந்தது. இதை இரு பறவைகள் மரத்தின் இன்னொரு கிளையில் அமர்ந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தன.. பெண் பறவை கடைசியில் ஆண் பறவையிடம் சொல்லியது..
என்னங்க.. பாவம்ங்க... அவன் கிட்டே சொல்லிடலாம்ங்க.. அவன் நம்ம புள்ள இல்லே.. தத்து எடுத்திருக்கோம்ன்னு...!

Read more...

சீனப் பெருஞ் சுவர்.


இச் சுவர் குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. அவ்வப்போது விரிவாக்கப்பட்டு வந்த இச்சுவர் மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.
சுவரின் கட்டுமானப் பணிகளின்போது பலர் இறந்த காரணத்தால் இச்சுவர் உலகின் அதி நீளமான மயானம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.இப்போது இச்சுவர் திருத்த வேலைகள் எதுவுமின்றிச் சில கிராமங்களுக்கு விளையாட்டு மைதானமாகவும் வீடுகளும் சாலைகளும் அமைப்பதற்குக் கற்கள் எடுக்குமிடமாகவும் பயன்படுகின்றது.
சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது.ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை.
இச் சுவர் சிலசமயம் நவீன உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது.1938 ல் ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய அதிசயங்களின் இரண்டாவது புத்தகம் சந்திரனிலிருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ் சுவர் மட்டுமே என்று குறிப்பிட்டது.
இது மிகைப்படுத்தப்பட்டது எனினும் தாழ்வான பூமியைச் சுற்றும் சுற்றுப்பாதையிலிருந்து அதாவது சந்திரனிலும் ஆயிரம் மடங்கு குறைவான தூரத்திலிருந்து பார்க்கும்போது சில வாய்ப்பான சமயங்களில் இது வெறும் கண்ணுக்குத் தெரியக்கூடும்.

Read more...

நகைச்சுவை - மூட்டைபூச்சி

வீட்டில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரிக்கவே, திரு. டோப்பு டோலாக்கிடம் அவர் மனைவி தெளிப்பான் குப்பி (ஸ்ப்ரே கேன்) வாங்கிவரச் சொன்னாள்.
அவரோ தவறுதலாக, கரப்பான்பூச்சி தெளிப்பானை வாங்கிவந்துவிட, மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினாள்.. திரு. டோப்பு டோலாக்கு, உதவிக்கு வந்தார்.. " கேன்ல "கரப்பான்க‌ளுக்கானது" போட்டிருக்கறதை அந்த மூட்டைபூச்சிகளுக்கு , காட்டாம அடி..!

Read more...

Back to TOP